TA

பொருட்கள் மீது QR குறியீடுகள்: ஒரு பொருளை பற்றி விரிவான தகவல்கள் பெறுவது உங்களுக்கு வாங்குதில் சரியான முடிவு செய்ய உதவுகிறது

எங்கள் சேவையை இந்த கருத்தை மனதில் கொண்டு உருவாக்க தொடங்கினோம். அதாவது நீங்கள் ஒரு தயாரிப்பை பற்றி எவ்வளவு நம்பகமான தகவல் கொண்டுள்ளீரோ, அது நீங்கள் அந்த பொருளை வாங்கும் முடிவிற்கு ஏதுவாக இருக்கும். இதன் விளைவாக, நீங்கள் வாங்கியதில் மேலும் திருப்தி அடைவீர்.

சில நேரங்களில் நீங்கள் கடையில் இருக்கும் போது ஒரு குறிப்பிட்ட தயாரிப்பை தேர்வு செய்வது மிகவும் கடினமாக இருக்கும் (பெரும்பாலான நேரம் குறிப்பிட்ட பொருட்கள் பற்றிய வாங்கும் முடிவுகள் கடையில் இருக்கும் போது தான் நடைபெறும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே). அனைத்து பொருளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பதினால் எந்த தயாரிப்பை வாங்குவது என்று முடிவெடுப்பது ரொம்ப கஷ்டமாய் இருக்கும். நீங்கள் வேண்டுமானால் கடை ஊழியரிடம் கருத்து கேட்க முடியும். ஆனால் முதலாவதாக ஒவ்வொரு கடையிலும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த பதில் சொல்ல கூடிய ஊழியர்கள் இருப்பதில்லை. இரண்டாவது, துரதிருஷ்டவசமாக, ஊழியர்கள் எப்போதும் உங்களுக்கு பிடித்த விஷயத்தை பற்றி அவ்வளவாக தெரிந்து வைத்து இருக்க மாட்டார்கள். மூன்றாவதாக ஊழியர்கள் பெரும்பாலும் உங்கள் நன்மையை விட அவர்களின் சொந்த நன்மைக்காக சிறந்த லாபம் தரும் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஒரு தயாரிப்பை வலியுறுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

வாங்குதில் சரியான முடிவு செய்வதற்கு உதவ எங்கள் சேவை உருவாக்கப்பட்டுள்ளது.

எங்கள் சேவையின் செயல்பாடு மிகவும் எளிது: உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் TrustThisProduct சேவையை பயன்படுத்தி தங்கள் தயாரிப்புகளுக்கு சிறப்பு வலைத்தளங்கள் உருவாக்குவர். பின்னர் QR குறியீடுகள் மூலம் அந்த வலைதளங்களுக்கு இணைப்புகளை உருவாக்குவர். இதன்மூலம் நீங்கள் கடையில் இருந்து கொண்டே உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் விரைவாகவும், எளிதாகவும் ஒரு QR ஸ்கேன் செய்து அந்த தயாரிப்பு பற்றி விரிவான தகவல்களை பெறலாம்.

நீங்கள் விரும்பினால், ஒரு விமர்சன பதிவு அல்லது தயாரிப்புக்கு சொந்தமான உற்பத்தியாளர் நிறுவனத்தின் மேலாளருக்கு நேரடியாக ஒரு கருத்து தெரிவிக்க முடியும். நீங்கள் உற்பத்தியாளர் தொடர்புத் தகவல் பற்றி இனி பார்க்க தேவையில்லை - ஒரு தொடர்பு நபர் ஒரே கிளிக்கில் இருக்கிறார்.

உங்களுக்கு பிடித்து விட்ட ஒரு தயாரிப்பு பற்றி உங்கள் நண்பர்களுக்கு சொல்ல வேண்டும் என்றால் பேஸ்புக் அல்லது கூகுள்+ அல்லது ட்விட்டர் போன்ற சமூக நெட்வொர்க்குகளில் எளிதாக பகிர முடியும்.

உற்பத்தியாளர்கள் பெரும்பாலும், பயனர் வழிமுறைள் மற்றும் சேவை மையங்கள் முகவரிகளை தங்கள் தயாரிப்பு விளக்கங்களில் இணைப்புகளாக வைப்பார்கள். அதனால் வாங்கி முடித்த பிறகும் எங்கள் சேவை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் ஆன்லைனிலோ உங்க புத்தக அலமாரியிலோ வழிமுறை கையேடுகளை தேட வேண்டாம் - ஒரு கிளிக்கில், உங்கள் தயாரிப்பு பற்றிய அனைத்து தகவலும் நீங்கள் பெற முடியும்.

எங்கள் சேவை, ஒரு தயாரிப்பின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகிறது (அனைவரும் இல்லை என்றாலும், பல உற்பத்தியாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்கின்றனர்). இந்த நோக்கத்திற்காக ஒவ்வொரு தயாரிப்பின் QR குறியீட்டின் கீழ் ஒரு சிறப்பு எண் உள்ளது. இந்த எண், நீங்கள் QR குறியீடு ஸ்கேன் செய்து திறக்கும் வலைத்தளத்தில் காட்டப்படும் எண்னுடன் பொருந்த வேண்டும்.

பொருட்களுக்கு QR குறியீடுகள்

இப்போது ஒரு QR குறியீடு உடன் "TrustThisProduct" என்ற வார்த்தையை நீங்கள் பார்த்தால் அந்த குறியீட்டை ஸ்கேன் செய்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியும். உங்களுக்கு தேவையானது கேமரா மற்றும் இன்டர்நெட் வசதி கொண்ட ஒரு ஸ்மார்ட்போன் அல்லது டேப்லேட், அத்துடன் QR குறியீடுகள் ஸ்கேன் செய்யும் ஒரு இலவச செயல்பாடு மட்டுமே.

உங்களுக்கு வெற்றிகரமான மற்றும் உண்மையிலேயே தேவையான நிறைய பொருட்கள் வாங்க நாங்கள் வாழ்த்துகிறோம், மற்றும் எங்கள் சேவை இதற்கு உதவுகிறது என்றால் நாங்கள் மிகவும் சந்தோஷப்படுவோம்.

TrustThisProduct®:

Copyright © 2014-2016, PVCode LLC
நாம் சிக்கலானதை எளிமைப்படுத்துகிறோம்

முதன்மை பக்கம்

சேவை பயன்பாட்டு ஒப்பந்தம் (ஆங்கிலம்)

தனியுரிமை கொள்கை (ஆங்கிலம்)

தகவல் தொடர்பு:
PVCode LLC
8 ச்டாவ்ரோவ்ச்கயா செயின்ட்,விளாடிமிர்,600022,ரஷ்யா
தொலைபேசி: +7 915 764 62 74 (ஆங்கிலம் பேசுவோருக்கு)
மின்னஞ்சல் முகவரி: contact@pvcode.com